மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள்...!

மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-12-13 14:00 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் அந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்லால் மஹவால் (60). இவரது மகன் பெயர் சத்யநாராயண் மஹவாலுக்கு திருமணமாகி தானிபாய் என்ற மனைவியும், மகனும் உள்ளனர்.

இதற்கிடையில், ராம்லாலுக்கும் அவரது மருமகள் தானிபாய்க்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு வாக்குவாதம் ஏற்றபட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சத்யநாராயணன் வீட்டில் இல்லாதபோது மாமனார் ராம்லாலுக்கும், மருமகள் தானிபாய்க்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தானிபாய் தனது மாமனார் ராம்லாலை பல முறை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராம்லால் மயங்கி விழுந்துள்ளார். அப்போது , வீட்டிற்கு வந்த சத்யநாராயணிடம் நடந்த சம்பவத்தை அவரது மகன் கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த ராம்லாலை அவரது மகன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்லால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனரை அடித்துக்கொன்ற மருமகள் தானிபாயை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்