கேரளாவில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்; மந்திரி தகவல்
கேரளாவில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என போக்குவரத்து மந்திரி தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள போக்குவரத்து மந்திரி அந்தோணி ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, இதற்கு முன்பு வாடகைக்கு மின்சார பேருந்துகளை எடுத்து இயக்கினோம்.
ஆனால் அதில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன். 50 புதிய மின்சார பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. நகரில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.