ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு

ராஜஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2021-12-12 14:12 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பைகானிர் பகுதியில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையமானது பாகிஸ்தானில் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ராஜஸ்தான் வரை நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்