மத்திய பிரதேசத்தில் இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வந்ததால் பரபரப்பு
மத்திய பிரதேசத்தில் இறந்த நபரின் செல்போனுக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் இறந்த நபரின் செல்போனுக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் ஷாக்யவார் (வயது 78) என்ற முதியவர் கடந்த மே மாதம் உயிரிழந்தார். உயிரிழந்து ஏறத்தாழ 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாகக் கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து உயிரிழந்த ஷாக்யவாரின் மகன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், எனது தந்தையின் செல்போன் எண்ணுக்கு கடந்த 3 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழும் தரவிறக்கம் செய்ய முடிந்தது” என்றார்.
இந்த குளறுபடி குறித்து மாவட்ட தடுப்பூசி அதிகாரியிடம் கேட்ட போது, “ இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், கணிணியில் ஏற்படும் பழுது காரணமாக இதுபோன்ற குளறுபடி நடக்க வாய்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.