தெலுங்கானாவில் 7.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 4 வெளிநாட்டினர் கைது

தெலுங்கானாவில் அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-12-10 22:56 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், சந்தேகத்திற்குரிய வகையிலான 4 பயணிகளிடம் சோதனையிட்டதில் தங்க கடத்தலில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.  அவர்கள் 4 பேரும் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.  அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.  அவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்