மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு மூத்த மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

Update: 2021-12-08 05:51 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பிரஹலாத் ஜோஷி, நிர்மலா சீத்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்