காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி டெல்லியில் தர்ணா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2021-12-06 19:34 GMT
புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.

காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறையையும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையும் உடனடியாக தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துவதாக மெகபூபா தெரிவித்தார்.

‘காஷ்மீர் வலியில் இருக்கிறது’ என்ற வாசகம் கொண்ட அட்டையை கையில் ஏந்தியிருந்த மெகபூபா, தான் காஷ்மீரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எனவேதான் நாட்டின் தலைநகரில் தர்ணா மேற்கொள்ள முடிவெடுத்ததாக கூறினார். அப்போது, புகைப்படம் எடுப்பதற்காக முககவசத்தை அகற்றும்படி பத்திரிகை புகைப்படக்காரர்கள் சிலர் மெகபூபா முப்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனே அவர் புன்னகையுடன், ‘நான் முககவசத்தை அகற்றினால், உடனே என் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துவிடுவார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்