எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட அமித்ஷா
ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார்.
ஜெய்சால்மர்,
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ரோகிடாஷ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
இதன்பின்பு அவர் வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தும் கலந்து கொண்டார்.