12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம் மன்னிப்பு கேட்க மாட்டோம் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

ஜனநாயகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கம். அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது.

Update: 2021-12-01 21:20 GMT
புதுடெல்லி, 

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

12 எம்.பி.க்கள் இடைநீக்கம், சபை விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, விதிமுறைகள் மற்றும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மத்திய அரசிடம் நாங்கள் சலுகை கேட்கவில்லை.

ஜனநாயகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கம். அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது. எங்களுக்கு பாடம் கற்க விரும்பியதாக மத்திய அரசு கூறுகிறது. இது எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் சதித்திட்டம்.

நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்