உலகின் உயரம் குறைவான பாடி பில்டராக இந்தியர் கின்னஸ் சாதனை
இந்தியாவைச் சேர்ந்த பிரதிக் வித்தல் மோகித் என்பவர் உலகின் உயரம் குறைவான பாடி பில்டர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிக் வித்தல் மோகித். இவர் பிறக்கும் போதே குறுகிய கை கால்களுடன் பிறந்தார். எனினும் அவர் தன்னம்பிக்கையுடன் பாடி பில்டிங் விளையாட்டில் ஈடுபட்டார். முதன் முதலில் 2016 ல் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றார்.
பிரதிக் 102 செமீ (3 அடி 4 அங்குலம்) உயரமானவர். தற்போது அவர் உலகின் உயரம் குறைவான பாடி பில்டர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
Pratik competes in events across India 💪
— #GWR2022 OUT NOW (@GWR) October 8, 2021