வெற்றிலை கொரோனாவை குணப்படுத்துமா? மத்திய அரசு விளக்கம்
வெற்றிலை உட்கொள்வது கொரோனா வைரஸைத் தடுக்கும் என்று செய்திதாள்களில் செய்தி வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
வெற்றிலை உட்கொள்வது கொரோனா வைரஸைத் தடுக்கும் என்று செய்திதாள்களில் செய்தி வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது,. இந்த நிலையில் வெற்றிலை உட்கொள்வது கொரோனா தொற்றை குணப்படுத்தாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றினாலே போதுமானது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.