மேற்கு வங்கத்தில் மத்திய மந்திரி முரளிதரன் கார் மீது தாக்குதல்: பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்
மேற்கு வங்கத்தில் மத்திய மந்திரி முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி வி.முரளிதரன் வாகனம் மீது திரிணமுல் கட்சியினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வீடியோவை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, மேற்கு வங்கத்தில் அமைச்சரின் வாகனத்திம் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது எனில், அங்கு யாரால் பாதுகாப்பாக இருக்க முடியும்?. மேற்கு வங்கத்தி வன்முறையை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிக்கு தகுந்த தண்டனைப் பெற்றுத்தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.