ரெம்டெசிவிர் வாங்கிய விவகாரம்; பா.ஜனதா எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது; மும்பை ஐகோர்ட்டு மறுப்பு

ரெம்டெசிவிர் வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.

Update: 2021-05-06 03:18 GMT

ரெம்டெசிவிர் வாங்கிய எம்.பி.

அகமதுநகர் எம்.பி.யாக பா.ஜனதாவை சேர்ந்த சுஜய் விகே பாட்டீல் உள்ளார். இவர் சட்டவிரோதமாக டெல்லியில் இருந்து 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனுதாரர் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் வாங்கிய பா.ஜனதா எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

ஐகோர்ட்டு மறுப்பு

இந்த மனுவை நீதிபதிகள் ரவீந்திர குகே, பால்சந்திரா தேபாத்வர் விசாரித்தனர். அவர்கள் ரெம்டெசிவிர் வாங்கியதற்காக எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட மறுத்தனர்.

அதேேநரத்தில் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு மனுதாரிடம் தொிவித்தனா். மேலும் போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்