டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானாவின் ஜிந்தில் உள்ள கிஷன் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் 300 பேரின் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது என்றார்.