மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

Update: 2021-03-01 17:06 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்படி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை நாட்டில் மொத்தம் 1 கோடியே 43 லட்சத்து ஓராயிரத்து 266 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை வியாதிகளை உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  இதேபோன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.  பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ந்தேதி கொரோனா பாதிப்புக்கு ஆளானேன் என அமித்ஷா கூறிய நிலையில், அவர் மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.  அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை எடுத்து கொண்டார்.

மேலும் செய்திகள்