டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2021-02-03 08:02 GMT
புதுடெல்லி,

குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது.  இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சுமார் 123- பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை  சேகரித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜனவரி 26 அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறைகளில் வைக்கப்பட்டுள்ள 115 பேரின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம். 

ஜனவரி 26 -ம் தேதி  கிசான் அந்தோலனில் பங்கேற்ற பின்னர் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடும் மக்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்