'ஏன் பல சர்வாதிகாரிகளுக்கு ”எம்” என்று தொடங்கும் பெயர்கள் உள்ளன?: ராகுல் காந்தி கேள்வி
'ஏன் பல சர்வாதிகாரிகளுக்கு ”எம்” என்று தொடங்கும் பெயர்கள் உள்ளன? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த டுவிட் பதிவில்,
“உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் தனது டுவிட்டரில் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான டுவிட்களை மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் முடக்கியது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மத்திய அரசை சாடியிருந்தார்.