வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

இந்தியா-வியட்நாம் இடையே இன்று நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இரு நாட்டு பிரதமர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Update: 2020-12-21 03:20 GMT
புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே காணொலி வாயிலாக நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டின் போது வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த உச்சிமாநாட்டில் இரு நாடுகள் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்