விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2020-12-14 00:44 GMT
சண்டிகர்,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. (சிறைத்துறை) லக்மிந்தர்சிங் ஜாக்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்