74-வது பிறந்தநாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
74-வது பிறந்தநாளையொட்டி சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.