ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-12-03 23:45 GMT
புவனேஷ்வர், 

ஒடிசாவில் இன்று அதிகாலை 2:13 மணிக்கு மயூர்பஞ்ச் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.

அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை 3.10 மணிக்கு பிதோராகார்க் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்