ஆந்திரா, கர்நாடக மாநில கொரோனா பாதிப்பு விவரம்

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-17 16:25 GMT
அமரவாதி,

ஆந்திராவில் புதிதாக 1,395 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,56,159 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,32,284 பேர் குணமடைந்துள்ளனர், 6,890 பேர் பலியாகியுள்ளனர்.

அதேபோல், கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,336 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 8,64,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,27,241 பேர் குணமடைந்துள்ளனர், 11,557 பேர் பலியாகியுள்ளனர். 25,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்