பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 7 பேரை காணவில்லை
பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். 7 பேரை காணவில்லை.
பாட்னா,
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா பகுதியில் கண்டக் நதியில் 100 பேருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றது. படகில் அதிக அளவு ஆட்கள் ஏறியதில் சுமை கூடி படகு ஒரு பக்கம் ஆக திடீரென சாய்ந்தது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 9 பேரை மீட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 7 பேரை காணவில்லை. நீரில் மூழ்கிய மற்றும் பிற நபர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.