தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள பட்னாவிஸ் இன்று வீடு திரும்பினார். மேலும் சில நாள்களுக்கு அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.