மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

Update: 2020-11-04 12:54 GMT

ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை இன்று  வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து சோதித்து பார்க்கப்பட்டது. 

மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதனை ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்