பெங்களூருவில் இருந்து ஆதர்ஷ் நகருக்கு 56.54 டன் பொருட்களை ஏற்றிச்சென்ற கிஷன் ரெயில்
பெங்களூருவில் இருந்து ஆதர்ஷ் நகருக்கு 56.54 டன் பொருட்களை கிஷன் ரெயில் ஏற்றிச்சென்றது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல கிஷன் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த கிஷன் ரெயில் 3-வது பயணமாக கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் இருந்து மாலை 4.45 மணிக்கு ஆதர்ஷ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அப்போது 56.54 டன் பொருட்களை கிஷன் ரெயில் ஏற்றி சென்று உள்ளது. இதில் 0.32 டன் அத்தியாவசிய பொருட்கள் பெங்களூருவில் இருந்தும், 55.01 டன் அத்தியாவசிய பொருட்கள் மைசூரு ரெயில்வே மண்டலத்தில் இருந்தும், 1.21 டன் வேளாண் பொருட்கள் உப்பள்ளி மண்டலத்தில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த ரெயில் 6-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆதர்ஷ்நகரை சென்றடையும். 2,716 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் 56 மணி நேரம் 45 நிமிடத்தில் பயணிக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.