ஹத்ராஸ் சம்பவம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை வேண்டும் - பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை
ஹாத்ரஸ் வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று இறந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நொய்டா,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தின்போது வாலிபர்கள் பயங்கரமாக தாக்கியதால் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்து உள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநில அரசை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப்போல இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஹத்ராஸ் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகத்தினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் தடை விதித்து இருந்தது.
எனினும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் கடந்த 1-ந்தேதி டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்ல முயன்றனர்.
ஆனால் நொய்டா அருகே உத்தரபிரதேச எல்லையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ஹாத்ரஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு காவல்துறையினா் சனிக்கிழமை அனுமதி வழங்கினா்.
காவல்துறையினா் அனுமதி வழங்கியதை தொடா்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். சுமாா் 45 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்த இளம்பெண்ணின் சகோதரர் கூறுகையில்,
இச்சம்பவத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதுதொடர்பாக ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.