டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு யோகா பயிற்சி

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Update: 2020-10-04 07:03 GMT
புதுடெல்லி,

டெல்லியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

டெல்லியில் உள்ள சர்தார் படேல் மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 5,500 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் சார்பில் சர்தார் படேல் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற யோகாசனப் பயிற்சியில் 1,200 கொரோனா நோயாளிகள் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். இதில்  முன்களப் பணியாளர்களும் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தனர்.

மேலும் செய்திகள்