கில்கிட்-பால்டிஸ்தானில் இனப்படுகொலை - இன அழிப்பை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டம் - லடாக் எம்.பி
கில்கிட்-பால்டிஸ்தானில் இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக லடாக் எம்.பி கூறி உள்ளார்.
லே (லடாக்):
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஒரு முழு மாகாணத்தின் நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளார் என லடாக் எம்பி கூறி உள்ளார்.
இம்ரான் கான் பயங்கரவாத அச்சுறுத்தலையும் உள் அமைதியின்மையையும் சமாளிக்க சிறிதும் எந்த முயற்சியும் செய்யவில்லை, இப்போது ஒரு இனப்படுகொலை பற்றிய பெரும் அச்சம் அதன் அப்பாவி குடிமக்களிடம் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்களீடம் உள்ளது.
கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் மிகக் கொடூரமான இனப்படுகொலை மற்றும் இன அழிப்பைத் தொடங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-
“கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் கில்கிட்-பால்டிஸ்தானில் மிகவும் மிருகத்தனமான இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை தொடங்க பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டுள்ளது. நான் மக்கள் இயக்கத்தை ஆதரிக்கிறேன், ”என்று சமூக ஊடக தளமான ட்விட்டரில் நம்கியால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய செய்தி நிறுவனம் தி எக்ஸ்பிரஸ்ண் டிரிப்யூன் செப்டம்பர் 17 அன்று அமைச்சர் அலி அமீன் காந்தபூரை மேற்கோள் காட்டி, இம்ரான் கான் அரசாங்கம் “கில்கிட்-பால்டிஸ்தானை (ஜி-பி) ஒரு முழு மாகாணத்தின் நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ள்ளார் என்று கூறியது.
மேலும் முறையான அறிவிப்பை வெளியிட பாகிஸ்தான் பிரதமர் விரைவில் இப்பகுதிக்கு வருவார் என்று காந்தபூர் கூறினார்.
கடந்த மாதம், இந்திய பிராந்தியங்கள் உரிமைகோரல்களைக் கொண்ட பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டதற்காக இம்ரான் கானை இந்தியா கண்டித்து, அதை "அரசியல் அபத்தத்திற்கான ஒரு பயிற்சி" என்று கூறியது.