லடாக் எல்லை விவகாரம்: எதையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது - பார்லி குழுவிடம், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம்
லடாக் எல்லையில் சீனா அத்துமீறல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எதையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளதாக, பாதுகாப்பு குறித்த பார்லி குழுவிடம், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நமது நிலத்தை ஆக்கிரமித்த சீனா- திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு? சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்திலும் கடவுளின் செயல் என கைவிரிக்கப் போகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் லடாக் எல்லை விவகாரத்தில் பாதுகாப்பு தொடர்பான பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கலந்து கொண்டார். மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக பதவியேற்ற பிறகு, அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில், ராகுல்காந்தி முதன்முறையாக கலந்து கொண்டார்.
எம்.பி.,க்களிடம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாவது:
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற சீனா செய்யும் எந்த முயற்சிகளையும் முறியடிக்க முப்படைகளும் தயாராக உள்ளன. எல்லையில், சீன படைகள் தவறாக எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையில் உஷாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.