அந்தமானில் புதிதாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அந்தமானில் புதிதாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட்பிளேர்,
அந்தமான் நிக்கோபார் தீவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 7 பேர் விமானங்களில் வந்திறங்கியவர்கள்.
இதன் மூலம் அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 359 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை அங்கு கொரோனாவுக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.