கொச்சியில் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு
கொச்சியில் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று நிர்வாக மேலாளர் தெரிவித்து உள்ளார்.
பெரும்பாவூர்,
கொச்சியில் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று நிர்வாக மேலாளர் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் உருவான கொரேனா வைரசானது பல நாடுகளில் பரவி உயிரிழப்புகளை அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியாவும் விதி விலக்கு இல்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கொச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. சுமார் 5 மாதங்களாக சேவை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கொச்சியில் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக மேலாளர் அல்கேஷ் குமார் சர்மா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் எதிரொலியாக கொச்சியில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் வருகிற 7-ந் தேதி(நாளை மறுநாள்) முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். அதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 7, 8-ந் தேதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் 10 நிமிட இடைவேளையில் சேவை நடைபெறும். அதன்பிறகு 9-ந் தேதி முதல் வழக்கமான சேவை தொடங்கும்.
அதாவது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும். மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் 20 நிமிட இடைவேளையில் சேவை நடத்தப்படும். இரவு 9 மணியோடு அன்றைய சேவை நிறைவடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்கு சேவை தொடங்கும். ஒவ்வொரு நிலையங்களிலும் குறைந்தது 20 நொடிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்படும்.
ஆலுவா, தைக்கூடம் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் ரெயில் நிறுத்தப்படும். அப்போது வாசல்களை முழுவதுமாக திறந்து வைத்து, சுத்தமான காற்று உட்புக செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப சேவையை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.