3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை 20 நாட்களில் 3 வது சம்பவம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-09-04 07:46 GMT
லக்னோ
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த புதன் கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியை தேடி வந்த பெற்றோர்கள் சிறுமி கிடைக்கததால் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே கிராமத்தில் வசிக்கும் லெக்ராம் என்ற நபர் காரணமாக இருக்கலாம் எனக் கூறி அவரை தேடி வருகின்றனர்.
 
லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் இது மூன்றாவது சம்பவம் ஆகும். இதற்கு முன்னர் 13 வயது சிறுமியும் 17 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்