ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-02 14:43 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,55,531 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 72 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,125 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 1,03,076 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 8,454 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3,48,330 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்