மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு

மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-02 07:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில்  மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும்,  செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் நாளான செப்டம்பர் 14-ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்று  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்