கொரோனா பாதிப்பு: வீடுகளுக்கு சீல் மன்னிப்பு கோரிய மாநகராட்சி கமிஷனர்
கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசி தேவைகளுக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்களால் கமிஷனர் மன்னிப்பு கோரினார்
பெங்களூரு
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ச பாதிப்புக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளுக்கு எந்த விதமான அறிகுறியோ, உடல் நல பாதிப்பு இல்லாமல் இருந்தாலோ, அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்களும் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளை 2 நாட்களுக்கு ஒரு முறை ஆஷா திட்ட ஊழியர்கள் உடல் நலம் பரிசோதிக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் கொரோனா நோயாளிகள், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தடுக்க, அவர்களது வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து கொடுக்க வேண்டும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் மாநகராட்சி எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை, குறிப்பாக மருந்துகளை கூட கொடுப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன
அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளை 2 நாட்களுக்கு ஒரு முறை ஆஷா திட்ட ஊழியர்கள் சென்று உடல் நலம் பரிசோதனை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று துப்புரவு தொழிலாளர்கள், குப்பைகளை அள்ளி செல்வதில்லை என்று நோயாளிகள் கூறியுள்ளனர். சில நோயாளிகள் 22 நாட்களாக வீட்டு தனிமையில் இருப்பதாகவும், அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தி அறிக்கை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அந்த விதிமுறைகளை மீறி கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், இதனால் பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் டொம்லூர் அருகே இரண்டு குடியிருப்பு உள்ள பகுதியின் அதன் கதவுகளை நகராட்சி கழகத்தின் தொழிலாளர்கள் தகடுகளை கொண்டு அட்டைத்து சீல் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குடியிருப்புகளில் ஒன்றில் வயதான தம்பதியினரும் மற்றொன்றில் 2 குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வருகிறார். அவர்கள் அத்தியாவசிய தேவைக்களுக்கு யாரையும் அணுக முடியாதபடி வெள்ளை தகடு கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அந்த வீடுகளை சீல் வைத்து உள்ளனர்.
இந்த விவகாரம் விமர்சனத்தை தூண்டியது
இதை தடர்ந்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத பிரசாத் தனது டுவிட்டரில் தடுப்புகளை உடனடியாகக் கழற்றுவதை உறுதிசெய்துள்ளதாகவும், "உள்ளூர் ஊழியர்களின் செயல்களுக்கு மன்னிப்பும் கோரி உள்ளார்.
இதுகுறித்து அவர்கூறி உள்ளதாவது;
இந்த தடுப்புகளை உடனடியாக அகற்றுவதை உறுதி செய்துள்ளேன். அனைத்து நபர்களையும் கண்ணியமாக நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கட்டுப்படுத்தப்பட்டதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும், பாதிக்கப்படாதவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுமாகும்.
களங்கத்தை விளைவிக்கும் எந்தவொரு சிக்கலையும் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உள்ளூர் ஊழியர்களின் செயலுக்கு மன்னிப்பு என அதில் கூறி உள்ளார்
I have ensured removing of this barricades immediately. We are committed to treat all persons with dignity. The purpose of containment is to protect the infected and to ensure uninfected are safe. 1/2 pic.twitter.com/JbPRbmjspK
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020
We are committed to address any issues that result in stigma. Apologies for the over enthusiasm of the local staff. 2/2 #BBMP#Bengaluru#Covid#StayHomeStaySafe@CMofKarnataka@DHFWKA@BBMP_MAYOR@iaspankajpandey
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020