30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.
இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன.
இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி கே. விஜயராகவனுடன் இணைந்து செயல்படும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு, ஒரு தனி விமானத்தில் இந்தியாவுக்கு வருகிறது. இதை இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தொழில் நுட்பத்தை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனுடண் இணைத்து, இயல்பான வாழ்க்கையை விரைவாக மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியா வரும் இஸ்ரேல் விமானத்தில் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான அந்த நாட்டின் தொழில் நுட்பமும் வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் அரசின் சிறப்பு அனுமதி பெற்று, எந்திர வென்டிலேட்டர்களும் அந்த விமானத்தில் எடுத்து வரப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது முதல் இதுவரை 3 முறை பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.