இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,395 கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,395 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-21 05:00 GMT
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 587 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு 11,55,191 ஆக உயர்ந்து உள்ளது. குணமடைந்தவர்கள் - 7,24,577 ஆக உள்ளனர் மொத்த உயிரிழப்பு - 28,084  என பதிவாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 1,43,81,303 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,395  கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்