பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியதால் வரும் பணத்தை கொரோனா தடுப்பு செலவுகளுக்காக கொடுக்கலாம் ப.சிதம்பரம் யோசனை

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.3 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறதாம்.

Update: 2020-07-20 20:38 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.3 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறதாம். முன்பும் பல முறை கேட்டார்களே, மத்திய அரசு பணம் தரவில்லையே? இது சம்பிரதாயமான கோரிக்கையா? அல்லது இந்த முறை மத்திய அரசு பணம் தரும் என்று நம்பி கேட்டார்களா? மத்திய அரசிடம் வருவாயும் இல்லை. இருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என்ற திட்டமும் இல்லை.

பெட்ரோல்-டீசல் வரியையும், விலையையும் நாள்தோறும் ஏற்றி மக்களை கசக்கி பிழிகிறார்களே, அந்த பணத்தை கொரோனா தடுப்பு செலவுகளுக்காக மாநில அரசுகளுக்கு பிரித்து தந்தாலே போதும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்