சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை தொடர்பான வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுடெல்லி,
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர்அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மத்திய அரசு கடந்த மாதம் (ஜூன்) சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேசமயம் இந்த வழக்கில் அவசர விசாரணை தேவை இல்லை என்று விவசாயிகள் தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்த வழக்கில் 80-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் உள்ளனர். கொரோனா காலத்தில் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு அவர்கள் ஆஜராக முடியாது என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை தேதி எதுவும் குறிப்பிடாமல் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.