ஒரே நாளில் புதிய உச்சமாக 39 ஆயிரம் பேருக்கு கொரோனா உண்மையிலேயே இந்தியாவில் மோசமான பாதிப்பா?
இருபத்தோரோம் நூற்றாண்டு இந்தியாவின் கரும்புள்ளி, கொரோனா வைரஸ் தொற்று நோய்.
புதுடெல்லி,
இருபத்தோரோம் நூற்றாண்டு இந்தியாவின் கரும்புள்ளி, கொரோனா வைரஸ் தொற்று நோய். இப்படித்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது.
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட இந்த வைரஸ் தொற்று, இந்தியாவில் அடியெடுத்து வைத்த நாள் ஜனவரி 30. 6 மாத காலம் முடியப்போகிறது. இதுவரையில்லாத ஊரடங்குகள், கட்டுப்பாடுகள், முக கவசங்கள், தனிமனித இடைவெளிகள், கை சுத்தம் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் எத்தனை எடுத்தும், கொரோனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது போல்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை கொரோனா தொற்று தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 38 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது புதிய உச்சம்தான். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 பேரை பாதித்துள்ளது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதெல்லாம் இந்தியாவில் கொரோனாவின் ருத்ர தாண்டவத்துக்கு கட்டியம்கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா என்று சொல்லி விட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.
என்னதான் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றாலும் இந்தியா 135 கோடி மக்களைக் கொண்ட நாடு என்பதை மறந்து விடலாகாது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் சொல்லி இருப்பது கவனத்தை கவர்கிறது.
கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 11 நாடுகளாக கருதப்படுகிற அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பெரு, சிலி, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஈரான், பாகிஸ்தான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மொத்தமாக பார்த்தால் இந்தியாவை விட 8 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகம்; அது மட்டுமல்ல, இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை விட இந்த நாடுகளின் மொத்த இறப்பு 14 மடங்குகள் அதிகம் என்று சொல்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.
இப்படி பார்க்கிறபோது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும், மிக மோசமாக இல்லை.
மராட்டியம் முதல் இடம்
இந்தியாவிலேயே அதிக பாதிப்பை சந்தித்து வருகிற முதல் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு 3 லட்சத்து 937 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இரண்டாம் இடத்தில் நமது தமிழகம் இருக்கிறது.
3-ம் இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 582 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 4-ம் இடத்தில் கர்நாடகம் (59 ஆயிரத்து 652), 5- இடத்தில் குஜராத் (47 ஆயிரத்து 390), 6-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (47 ஆயிரத்து 36), 7-ம் இடத்தில் ஆந்திரா (44 ஆயிரத்து 609), 8-ம் இடத்தில் தெலுங்கானா (43 ஆயிரத்து 780), 9-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (40 ஆயிரத்து 209), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (28 ஆயிரத்து 500) ஆகியவை உள்ளன.
10 ஆயிரத்துக்கும் மேலாக தொற்று பாதிப்பு உள்ள மாநிலங்களாக அரியானா, பீகார், அசாம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், கேரளா ஆகியவை உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 543 ஆகும். மொத்த பலி அளவு 26 ஆயிரத்து 816 ஆகும். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 144 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 93 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 88 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் 52 பேரும், மேற்கு வங்காளத்தில் 27 பேரும், டெல்லியில் 26 பேரும், உத்தரபிரதேசத்தில் 24 பேரும், அரியானாவில் 17 பேரும், குஜராத்தில் 16 பேரும், மத்திய பிரதேசத்தில் 9 பேரும், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா 7 பேரும், தெலுங்கானாவில் 6 பேரும், ஐம்மு காஷ்மீரில் 5 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 3 பேரும், அசாம், திரிபுரா, கேரளாவில் தலா 2 பேரும், சண்டிகாரில், சத்தீஷ்காரில், உத்தரகாண்டில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
கொரோனாவுக்கு மொத்தம் பலியான 26 ஆயிரத்து 816 பேரில், மராட்டியம் முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. அங்கு 11 ஆயிரத்து 596 பேர் இறந்திருக்கிறார்கள்.
2-வது இடத்தில் டெல்லி (3,597) 3-வது இடத்தில் தமிழகம், 4-வது இடத்தில் குஜராத் (2,122), 5-வது இடத்தில் கர்நாடகம் (1,240), 6-வது இடத்தில் உத்தரபிரதேசம் (1,108), 7-வது இடத்தில் மேற்கு வங்காளம் (1,076), 8-வது இடத்தில் மத்திய பிரதேசம் (706), 9-வது இடத்தில் ஆந்திரா (586), 10-வது இடத்தில் ராஜஸ்தானும் (553) உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 23 ஆயிரத்து 672 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 422 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 379 ஆகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 127 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை நேரிட்டுள்ள கொரோனா பலியில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட வியாதிகளுடன் கொரோனாவும் சேர்ந்து பாதிக்கப்பட்டுதான் மரணத்தை தழுவி உள்ளனர்.
எனவே இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது என்ற மாயை இன்றி, நம்பிக்கையோடு எதிர்கொள்கிறபோது அதில் இருந்து மீண்டு வர முடியும். நம்பிக்கைதான் வாழ்க்கை.