மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் தேவை: மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தல்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-11 20:57 GMT
புதுடெல்லி, 

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வீடியோ மூலம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

நாம் வளர்ந்த நாடுகளுடன் இணையாக நிற்க விரும்பினால் நமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து மக்களுக்கும் மதங்களுக்கும் சமமாக பொருந்தும் ஒரு கடுமையான மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் தேவை.

சீனாவின் வளர்ச்சிக்குப் பின்னால் 1979-ல் கொண்டுவரப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் உள்ளது. சீனாவுக்கு இந்த சட்டம் இல்லை என்றால் இன்று அதன் மக்கள் தொகையில் மேலும் 60 கோடி அதிகரித்து இருந்திருக்கும்.

மக்கள்தொகை கட்டுப்பாடு அரசியல் மற்றும் மதத்துடன் இணைக்கப்பட கூடாது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளங்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்