ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
காஷ்மீரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பசாந்த் ரத். இவர் சிவில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார். அவரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், ‘தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் பசாந்த் ரத் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஸ்ரீநகரில் உள்ள காவலர் தலைமையகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். காஷ்மீர் ஐ.ஜி.யின் அனுமதி இல்லாமல் அங்கிருந்து அவர் வெளியே செல்லக்கூடாது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.