கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ

கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2020-07-08 07:10 GMT
மும்பை

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலகம் முழுவதும் மருத்துவர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இந்த பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், சில மருத்துவர்கள் மற்றவர்களிடையே நேர்மறை மற்றும் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

மும்பையில் கொரோனா சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் ரிச்சா நேகி கவச ஆடை அணிந்து சினிமா பாடலுக்கு ஆடிய நடனம் வைரலாகி வருகிறது. ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு ரிச்சா நடனமாடி வீடியோ ஒன்றை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

பொதுவாக இவர் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவதால் ஒருலட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளார். ஆனால் இந்த பாட்டுக்கு ஆடிய நடனத்துக்கு மட்டும் பத்து லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

 தாமே எதிர்பாராத அசுர வளர்ச்சி இது என்கிறார் மருத்துவர் ரிச்சா.கடுமையான காலங்களில் கூட நம்மை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே கவச ஆடையிலும் நடனம் ஆடியதாக கூறுகிறார் இந்த இளம்பெண் மருத்துவர்.

மேலும் செய்திகள்