கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-06-19 04:30 GMT
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்ந்து உள்ளது.

24 மணி நேரத்தில் 336 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 12,573ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,04,711 பேர் குணமடைந்துள்ளனர் என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்