கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பை தொடர்ந்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போராடி வருகின்றன. பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. நோய்த் தொற்று பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்தும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருவது குறித்தும் மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ வர்தன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா, மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் பற்றி உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆய்வு செய்ததாகவும், தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் இனி நிலவரம் எப்படி இருக்கும்? வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.