ரூ.150 கோடி இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கு: ஆந்திர முன்னாள் மந்திரி உள்பட 6 பேர் கைது
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது.
அமராவதி,
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. முந்தைய தெலுங்கு தேச அரசின் ஊழல்களை விசாரித்து வருகிறது. அந்த ஆட்சியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த கே.அட்சன் நாயுடுவை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், இ.எஸ்.ஐ. முன்னாள் இயக்குனர்கள் ரவிக்குமார், விஜயகுமார், இணை இயக்குனர் ஜனார்த்தன், சூப்பிரண்டு சக்கரவர்த்தி, மூத்த உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அட்சன் நாயுடு கைதுக்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.