கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை
கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கம்போடியாவுடன் இந்தியாவுக்கு ஆழமான கலாசார மற்றும் சரித்திர உறவு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
அனைத்து துறைகளிலும் இந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.