மக்களுக்கு பண உதவி அளிக்காமல் பொருளாதாரத்தை மத்திய அரசு அழிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களுக்கு பண உதவி அளிக்காமல் பொருளாதாரத்தை மத்திய அரசு அழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-06-06 19:06 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் சிறு, குறு தொழில்துறை நிலவரம் பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார். அதில், ‘’பொதுமக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பண உதவி அளிக்க மறுத்து, பொருளாதாரத்தை மத்திய அரசு தீவிரமாக அழித்து வருகிறது. இது ஒரு பேய் 2.0” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஏழைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் உடனடி நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறி வருகிறார்.

மேலும் செய்திகள்