புலம்பெயர்ந்த தொழிலாளர் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,000: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ .10,000 செலுத்துமாறு மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-06-03 14:19 GMT
கொல்கத்தா,

கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில், இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனா பெருந்தொற்றால் கற்பனை செய்ய முடியாத இன்னல்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் ஒருமுறை நிவாரணமாகப் தலா ரூ .10,000 வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் பிரதமர் நிவாரண நிதியின் ஒரு பகுதியை இதற்காகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்